“ரஷ்யா-உக்ரைன் இடையான போரை நிறுத்த தயார்”.. மீண்டும் டிரம்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்த  உக்ரைன் அதிபர்..

0
"ரஷ்யா-உக்ரைன் இடையான போரை நிறுத்த தயார்".. மீண்டும் டிரம்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்த  உக்ரைன் அதிபர்..
"ரஷ்யா-உக்ரைன் இடையான போரை நிறுத்த தயார்".. மீண்டும் டிரம்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்த  உக்ரைன் அதிபர்..

“ரஷ்யா-உக்ரைன் இடையான போரை நிறுத்த தயார்”.. மீண்டும் டிரம்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்த  உக்ரைன் அதிபர்..

 

கடந்த மார்ச் 1 அன்று உக்ரைன் அதிபர்  ஜெலென்ஸ்கி மற்றும் டிரம்ப் இடையே ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து நடந்த  வாக்குவாதத்திற்கு பிறகு, டிரம்ப் உக்ரைனுக்கான இராணுவ உதவி மற்றும் உளவுத் தகவல்களை பகிர்வதை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் மற்றும் இறுதி அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை ரஷ்யா மீது பெரிய அளவிலான வங்கி தடைகள் மற்றும் வரிகளை விதிக்க தீவிரமாக பரிசீலித்து வருவதாக டிரம்ப் கூறியுள்ளார். இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்காவும், உக்ரைனும் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை…13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்

அதாவது, “ர‌ஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த முழு மனதுடன் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். மேலும், சவுதி அரேபியாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, இந்த பேச்சுவார்த்தை ஆனது சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெறும் என்று சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது”.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!