
தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை…13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. இதனால், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்தது. இந்நிலையில், தற்போது தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உங்க PF பணத்தை எடுப்பதற்கு UAN நம்பர் தெரியலையா…?? அப்போ உடனே இந்த சூப்பர் ஐடியாவை பாலோ பண்ணுங்க..
அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று (11.03.2025) காலை 10 மணி வரை லேசானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

























