
2023-24 நிதியாண்டில் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 2000 ரூபாய் நோட்டுகள் குறித்த முக்கிய அப்டேட் – RBI வெளியிட்ட தகவல்!
இந்திய ரிசர்வ் வங்கியானது இருமாத நாணய கொள்கை கூட்டத்தை துவங்கி இருக்கும் நிலையில் அதில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் 6.50% விகிதம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ விகிதம்
இந்தியாவில் உள்ள வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும் அந்த வங்கியில் உள்ள அனைத்து சேவைகளும் ரிசர்வ் வங்கியின் நடைமுறைகளை பின்பற்றி தான் இருக்கும். நிலையில் ரிசர்வ் வங்கியானது இருமாத நாணய கொள்கை கூட்டத்தை நேற்று (ஜூன் 6) துவங்கியது. அதில் ரெப்போ வட்டி விகிதம் குறித்த மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்பிஐ எவ்விதமான மாற்றமும் செய்யாமல் ரெப்போ விகிதம் 6.50% ஆக தொடரும் என அறிவித்தது.
Follow our Instagram for more Latest Updates
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.70 சதவீதமாக குறைந்துள்ளது. அதனால் 2022-23 ஆம் நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி PMI குறியீடு எப்போதும் இல்லாத வகையில் 31 மாத உயர்வை மே மாதம் எட்டி இருப்பதால் இந்தியாவின் உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால் ரெப்போ விகிதம் உயர்த்தாமல் இருக்க சாதகமாக சூழ்நிலைகள் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
TNPSC Assistant Professor தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!
மேலும் ஜூன் 8 ஆம் தேதி MPC கூட்டத்தின் முடிவில் ஆர்பிஐ கவர்னர் 2000 ரூபாய் நோட்டு குறித்து அறிவிப்பு வெளியிடுவார். மேலும் இந்த நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான விளக்கம் மற்றும் கிளீன் நோட் பாலிசி குறித்தும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின்பு 2000 ரூபாய் நோட்டுகளின் நிலை என்ன என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.