
இந்த மாணவர்களின் உயர்கல்விக்கு அரசின் சூப்பர் திட்டம்.. லேப்டாப் இலவசம் – விண்ணப்பிக்க விதிமுறைகள் குறித்த விவரம்!
தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் இலவச லேப்டாப் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான படிநிலைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இலவச மடிக்கணினி
கேரளாவில் தகவல் தொடர்பு சாதனங்கள் கிடைக்காமல் பலர் படிப்பை தொடர சிரமப்படுகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு உதவி செய்யும் விதத்தில் அதிகாரிகள் புதிய திட்டம் ஒன்றை தொடங்கி இருக்கின்றனர். இந்த திட்டத்தில் 2023 ஆம் ஆண்டில் கேரளா மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம், தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடி போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், உயர்சாதி மாணவர்களுடன் ஒப்பிடும்போது, சரியான தொழில்நுட்ப முன்னேற்றம் இல்லாததால், வீட்டில் இருந்து படிக்கும் போது, பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். வறுமையின் காரணமாக மாணவர்கள் தங்கள் வாழ்நாளில் லேப்டாப், பெர்சனல் கம்ப்யூட்டரைப் பார்க்காமல் சிரமப்படுகின்றனர். அதனால் அவர்களுக்கு உதவி செய்ய இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 36,000 கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள்.
இந்த திட்டம் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது இந்தத் திட்டத்தின் கீழ், 12வது வாரியத் தேர்வில் சிறந்த சதவீதம் மற்றும் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என தெரிவிக்காட்டுள்ளது. இதற்கு சில விதிமுறைகள் இருக்கிறது. அதாவது
Telegram Updates for Latest Jobs & News – Join Now
- விண்ணப்பதாரர் கேரள மாநிலத்தின் நிரந்தர மற்றும் சட்டப்பூர்வ உறுப்பினராக இருக்க வேண்டும்
- விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 80% சதவிகிதம் அல்லது மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் ஒரு தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடி அல்லது மற்றொரு பிற்படுத்தப்பட்ட சாதியை சார்ந்தவராக இருக்க வேண்டும்
- விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 250000க்கு குறைவாக இருக்க வேண்டும்.
- இந்தத் திட்டத்திற்குத் தகுதிபெற விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்க வேண்டும்