நிலக்கரி சுரங்கத்தில் Apprentice வேலைவாய்ப்பு – 200+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!
Graduate & Technician Apprentice பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை NLC ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 210 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
NLC காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Graduate, Technician Apprentice பணிக்கென காலியாக உள்ள 210 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Apprentice கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Pharm / B.Com. / B.Sc.(Comp.Sci.) / B.C.A / B.B.A. / B.Sc. / D.Pharm / Diploma தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
NLC வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BEL நிறுவனத்தில் Project Engineer வேலைவாய்ப்பு – BE தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
Apprentice ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,028/- வரை மாத ஊதியம் (உதவித்தொகை) வழங்கப்படும்.
NLC தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.11.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


























