IND vs BAN 2024: தொடரை கைப்பற்றிய இந்தியா.. வரலாற்று சாதனை படைத்த இளம் வீரர்!!
இந்தியா வந்துள்ள நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான பங்களாதேஷ் ஆடவர் அணி 3 ஆட்டங்கள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி நேற்று (அக்டோபர் 9) மும்பையில் நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மகளிர் T20 உலகக்கோப்பை: இந்தியா சூப்பர் வெற்றி.. அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து அபாரம்!!
இந்த போட்டியின் மூலம் இந்திய வீரர் நிதீஷ்குமார் ரெட்டி ஓர் சாதனையை படைத்துள்ளார். ஒரே T20 போட்டியில் 70+ ரன்கள் குவித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை நிதீஷ் குமார் ரெட்டி பெற்றுள்ளார். தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.



























