மகளிர் உரிமைத் தொகை.. விடுபட்டவர்களுக்கு அரிய வாய்ப்பு.. உதயநிதி கொடுத்த முக்கிய அப்டேட்!!
தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொருளாதார தகுதியில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அதிகரித்த காய்கறிகளின் விலை..!! முழு விவரம் உள்ளே..!!
தற்போது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய கருத்தை கூறியுள்ளார். ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது’. ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத மகளிர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்’. ‘இதை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுசென்று, விடுபட்ட பெண்களுக்கும் உரிமைத் தொகை ரூபாய்.1,000 வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.




























Good very nice
Sc
S e