ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அதிகரித்த காய்கறிகளின் விலை..!! முழு விவரம் உள்ளே..!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் ஏற்ற தாழ்வுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நாளை ஆயுத பூஜை மற்றும் நாளை மறுநாள் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இன்று விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை பட்டியலை கீழே விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மின்தடை?? என்ன சொல்றீங்க.. காரணம் இது தான்!!
சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 90 ரூபாய், 1 கிலோ சின்ன வெங்காயம் 70 ரூபாய், அவரைக்காய் 80 ரூபாய், பீன்ஸ் 60 ரூபாய், பீட்ரூட் 40 ரூபாய், கத்தரிக்காய் 30 ரூபாய், முட்டைக்கோஸ் 15 ரூபாய், கேரட் 45 ரூபாய், முருங்கைக்காய் 70 ரூபாய், பூண்டு 280 ரூபாய், வெண்டைக்காய் மற்றும் உருளைக்கிழங்கு 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



























