நோயாளியை கோமா நிலைமைக்கு தள்ளும் நிபா வைரஸ் – பொதுமக்களே உஷார்!
சாதாரமாக காய்ச்சலில் ஆரம்பித்து கோமா நிலைமை வரைக்கும் நிபா வைரஸ் எடுத்து செல்வதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
நிபா வைரஸ்:
கேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் தொடர்ந்து பல உயிர்களை காவுவாங்கி கொண்டிருக்கிறது. மேலும், இந்த வைரஸ் கொரோனாவை காட்டிலும் அதிக தீவிரம் காட்டி வருகிறது. மூச்சுக்காற்று மற்றும் வியர்வையால் கூட தொற்று பரவும் என்பதால் அதிகளவில் பரவி வருகிறது. நிபா வைரஸ் தொற்று பரவிய 24 முதல் 48 மணி நேரத்திலேயே நோயாளி கோமா நிலைமைக்கு தள்ளப்படலாம்.
Follow our Twitter Page for More Latest News Updates
மேலும், மற்ற சாதாரண தொற்றை போல அதிக காய்ச்சல், தலைவலியில் ஆரம்பித்து சுவாசக் கோளாறு, மூளை அழற்சி மற்றும் கோமா நிலைமைக்கு தள்ளுகிறது. எனவே, பொதுமக்கள் சாதாரண காய்ச்சல் என பொருட்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஆட்டின் விலை கடும் சரிவு – 10 கிலோ ஆடு ரூ.8000க்கு விற்பனை!
இந்த காய்ச்சல் வௌவால்களிடம் இருந்து தான் பரவும் என்பதால் அவற்றின் மலம் அல்லது உமிழ்நீர் ஆகியவை தொற்றை ஏற்படுத்த வழிவகுக்கும். அதே நேரத்தில், விலங்குகள் உட்கொண்ட உணவினை உண்பதாலும் எளிதாக மனிதனுக்கு பரவும் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.