புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஆட்டின் விலை கடும் சரிவு – 10 கிலோ ஆடு ரூ.8000க்கு விற்பனை!
புரட்டாசி மாதம் துவங்கப்பட்டுள்ள ஆட்டின் விலை சந்தைகளில் மிக குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆட்டின் விலை:
புரட்டாசி மாதம் துவங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஆடு, கோழி மற்றும் மீன் விற்பனை மிகவும் சரிவடைந்துள்ளது. பொதுவாகவே, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சந்தையில் ஆடு விற்பனை களை கட்டுவது வழக்கம். ஆனால், தற்போது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தும் சரியாக விலைக்கு போகவில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Join Our WhatsApp
Group” for Latest Updates
அதாவது, 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.10,000 க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.8000க்கு மட்டுமே விலை போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதே போல, நாட்டுக்கோழி சந்தைகளில் கிலோவுக்கு ரூ.350 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.450ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், புரட்டாசி மாதம் முடியும் வரைக்கும் இறைச்சி விலை குறைவாகவே விற்கப்படும் என்பதால் விவசாயிகளுக்கு போதுமான வருமானம் இருக்காது.
தமிழகத்தில் செப் 23 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
அதே சமயம், புரட்டாசி முடிந்த முதல் வாரத்தில் இறைச்சி விற்பனை களைகட்டும் என்பதனால் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் இருக்கும். ஆனாலும், வருமானத்திற்காக தற்போதைக்கு குறைந்த விலைக்கு ஆடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.