தமிழகத்தில் செப் 23 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் செப் 23 ஆம் தேதி நடைபெற இருக்கும் வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதால் கட்டாயமாக இளைஞர்கள் கலந்து கொள்ளும்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது .
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக தனியார் துறை வேலைவாய்ப்புகள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் செப் 23ம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைத்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் சேவைத் துறை, ஆட்டொமொபைல், ஜவுளி போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனத்தினர் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான நபர்களைத் தகுதி அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளன. மேலும் அயல்நாட்டு வேலைவாய்ப்புக்கான’ பதிவு, இலவச திறன் பயிற்சிக்கான பதிவு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீடிக்கும் கனமழை எச்சரிக்கை – வானிலை அறிக்கை!
இந்த வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ என அனைத்து பட்டப்படிப்பு படித்தவர்களும் இணைந்து பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முகாமில் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்ளாலாம். இளைஞர்கள் கட்டாயமாக இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.