நல்லாசிரியர் விருது பெற புதிய விதிகள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகளில் சில திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாசிரியர் விருது:
நமது முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நாட்டில் கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. மத்திய அரசு இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து வருகிறது.
ஜூலை 21ம் தேதி பக்ரீத் பண்டிகை – தமிழக தலைமை ஹாஜி அறிக்கை!!
மேலும் மாநில அரசு சார்பில் விண்ணப்பங்கள் விரைவில் பெறப்பட உள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வழக்கமாக அறிவிக்கப்பட்ட நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் சில மாற்றங்களை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி இந்த ஆண்டு விருது பெற தேர்வாகும் ஆசிரியர்கள் தகுதியில், கொரோனா கால சேவையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
கடந்த ஆண்டு கொரோனா பரவல் முதல் அலை தாக்கத்தின் போது அரசின் உத்தரவு படி தவறாமல் பணிக்கு வந்தவர்கள், கொரோனா தன்னார்வ பணிகளில் ஈடுபட்டவர்கள், கொரோனா காலத்தில் கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்திய ஆசிரியர்கள் மட்டுமே இந்த விருது பெற முடியும் என புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.