ஜூலை 21ம் தேதி பக்ரீத் பண்டிகை – தமிழக தலைமை ஹாஜி அறிக்கை!!
தமிழகத்தில் நேற்று மாலை துல் – ஹஜ் பிறை தோன்றியதால் வரும் ஜூலை 21ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழக தலைமை ஹாஜி சலாஹூத்தீன் முஹம்மது ஆயூஃப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பக்ரீத் பண்டிகை:
இஸ்லாமியர்களின் முக்கிய நாளான பக்ரீத் பண்டிகை துல்-ஹஜ் மாதம் 10ம், நாள் கொண்டாடப்படும். தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் நேற்று துல்-ஹஜ் மாதத்தின் முதல் பிறை தென்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தலைமை ஹாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு – இன்று முதல் புதிய நடைமுறை!
இதனால் எந்த பண்டிகையும் சிறப்பாக கொண்டாட முடியவில்லை என்ற குறை மக்களிடம் உள்ளது. தமிழகத்திலும், கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்றின் தாக்கம் குறைந்து உள்ளதால் ஊரடங்கில் பல தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. தலைமை ஹாஜி அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் துல்-ஹஜ் பிறை பார்க்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இதனால் ஷரியத் முறைப்படி, பக்ரீத் பண்டிகை வரும் ஜூலை 21ம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கிடையில் தமிழகத்திலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இஸ்லாமிய மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பக்ரீத் பண்டிகை நபிகள் நாயகத்தின் தியாக குணத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.