இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – பீகார் அரசு அறிவிப்பு!
பீகார் மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று தினசரி பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று (ஜூலை 12) முதல் திறக்கப்பட உள்ளன.
பள்ளிகள் திறப்பு:
பீகார் மாநிலம் முழுவதும் தற்போது கொரோனா முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி இன்று (ஜூலை 12) முதல் 50% திறனுடன் பள்ளிகள் அனைத்தும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
நல்லாசிரியர் விருது பெற புதிய விதிகள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
இது குறித்து பீகார் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் சஞ்சய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘பீகார் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் இன்று (ஜூலை 12) முதல் 50% வருகையுடன், முழுமையான கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது’ என பதிவிட்டு உள்ளார்.
TN Job “FB
Group” Join Now
முன்னதாக ஜூலை 5ம் தேதி அன்று கொரோனா நிலைமையை ஆய்வு செய்த பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு பயிற்சி நிறுவனங்களை மீண்டும் திறக்க முதல்வர் நிதீஷ்குமார் அனுமதி அளித்தார். மேலும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.