2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் புதிய மாற்றம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நடைபெற்று வரும் நிலையில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
பட்டதாரி பணியிடம்:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் உள்ளிட்ட 2222 பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரையிலும் விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்துடன் தேர்வாளர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்று மற்றும் உரிய ஆவணங்களை சேர்த்து அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாத வங்கி விடுமுறை தினங்கள் – இத கவனிங்க மக்களே!
மேலும், இதற்கான போட்டித்தேர்வு ஜனவரி மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், 2222 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வில் 400 இடங்களை மட்டும் காலியாக வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் ஆசிரியர் தகுதி வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.