தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி – வெளியான ஷாக் அப்டேட்!
தமிழகத்தில் மழை அதிகமாக பெய்து வருவதால் காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினிற்கு தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
வைரஸ் காய்ச்சல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதனால் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாத்து கொள்ள சில நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
நவம்பர் மாத வங்கி விடுமுறை தினங்கள் – இத கவனிங்க மக்களே!
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவ அறிக்கை வெளியாகி இருக்கிறது. நேற்று அவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி இருந்ததால் அவர் மருத்துவமனைக்கு சென்று இருந்தார். அதன் பின் அவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.