புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான தேர்வு பட்டியல் வந்தாச்சு!

0
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான தேர்வு பட்டியல் வந்தாச்சு!

நடப்பாண்டில் (2024) புதிய ரேஷன் கார்டுக்கு தேர்வு செய்யப்பட்ட தகுதியான நபர்களின் பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு பட்டியல்:

ரேஷன் கார்டு என்னும் குடும்ப அடையாள அட்டையானது பொது மக்களின் குடியுரிமையை நிலை நாட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல் ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக இலவச அரிசி வழங்குவது, மலிவு விலையில் எரிபொருள் மற்றும் வீட்டு மளிகை சாமான்கள் வழங்குவது, ஊக்கத்தொகை வழங்குவது போன்ற உதவிகளை அரசு செய்கிறது. இத்தகைய புதிய ரேஷன் கார்டை பெற லட்சக்கணக்கான நபர்கள் அண்மையில் விண்ணப்பித்து இருந்தார்.

உங்கள் ஆதார் அட்டையை காணவில்லையா? – என்ன செய்யலாம்!

இவ்வாறு விண்ணப்பித்த நபர்கள் 18 வயது கீழுள்ளவராக இருக்க கூடாது, அரசு வேலை இருக்க கூடாது, வருமான வரி செலுத்த கூடாது, நான்கு சக்கர வாகனம் வைத்திருக்க கூடாது, ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது ஆகிய விதிகளை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள். இவ்விதிகளின் படி, UP குடியுரிமையை பெற்று புதிய ரேஷன் கார்டுக்கு 2024 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலை உத்திர பிரதேச மாநில அரசானது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா என்பதை வீட்டிலிருந்தபடியே அறிய விரும்பும் நபர்கள் உணவு மற்றும் வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் சென்று அறிவிப்புகள் என்பதை கிளிக் செய்து புதிய பட்டியலை பெற்றுக்கொள்ளலாம் .

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!