உங்கள் ஆதார் அட்டையை காணவில்லையா? – என்ன செய்யலாம்!

0
உங்கள் ஆதார் அட்டையை காணவில்லையா? - என்ன செய்யலாம்!
நாட்டின் மிக முக்கிய அடையாள ஆவணமாக விளங்கிவரும் ஆதார் அட்டை தொலைந்து விட்டால் என்ன செய்வது என்று தவிக்கும் மக்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது.

ஆதார் அட்டை:

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் 12 இலக்க தனித்துவ எண்களைக் கொண்ட ஆதார் அட்டையை வழங்கி உள்ளது. ஆதார் அட்டையில் ஒரு தனி நபரின் பெயர், வயது, முகவரி, பயோமெட்ரிக் விவரங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆதார் அட்டையுடன் நாட்டின் மற்ற அனைத்து அடையாள ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் அட்டை ஒன்றை மட்டும் வைத்து ஒரு தனிநபரை குறித்து அனைத்து விவரங்களையும் அரசு தெரிந்து கொள்ள முடியும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை எதிர்பாராத விதமாக தொலைத்து விட்டால் என்ன செய்வது என்று பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதற்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. ஆதார் அட்டை தொலைந்து விட்டால் அதனை யுஐடிஏஐ அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து டூப்ளிகேட் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு பெற்றுக் கொண்ட ஆதார் அட்டையை பிவிசி அட்டை வடிவத்தில் ரூபாய் 50 செலவில் மாற்றி பொதுமக்கள் தங்கள் கைகளில் தாராளமாக வைத்துக் கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!