EPFO பயனர்களின் கோரிக்கைகள் நிராகரிப்பு – PF தொகை எடுப்பதில் சிரமம்?

0
EPFO பயனர்களின் கோரிக்கைகள் நிராகரிப்பு - PF தொகை எடுப்பதில் சிரமம்?

EPFO  அமைப்பானது பயனர்கள் தங்கள் பிஎஃப் தொகை கிளைம் கோரிக்கைகளை வைக்கும் போது நிராகரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

EPFO  அமைப்பு:

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி வாரியத்தில் ஊழியர்கள் தங்கள் மாதாந்திர சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீத தொகையை சேமிப்பாக செலுத்தி வருகின்றனர். இதனுடன் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் சார்பாகவும் குறிப்பிட்ட தொகை மாதம் தோறும் வரவு வைக்கப்படுகிறது. இந்த தொகையானது ஊழியர்களின் எதிர்பாராத மற்றும் திடீர் செலவுகளுக்கு கிளைம் செய்து கொள்ளும் வசதிகள் உள்ளது. இதுவரையிலும் 277 மில்லியன் பேர் EPFO அமைப்பில் சுமார் 20 லட்சம் கோடி தொகையை செலுத்தியுள்ளனர். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஈ பி எஃப் ஓ அமைப்பிடம் வைக்கும் கிளைம் கோரிக்கைகள நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

சராசரியாக 20 நாட்களுக்குள் PF தொகையை விடுவிக்க எடுத்துக் கொள்ளும் அமைப்பு தற்போது அதை தாண்டிய பிறகும் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2022 – 23 ம்  ஆண்டில் 73.87 லட்சம் PF கோரிக்கைகள் வைக்கப்பட்டதில் 33.8% அதாவது 24.93 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 46.66 லட்சம் மனுக்களுக்கு மட்டுமே தீர்வாளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ  தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!