மகளிர் உதவி தொகையை இனி இவர்களும் பெறலாம்..!! அடிதூள் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்..!!
தமிழக அரசு பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்,”கலைஞர் மகளிர் உரிமை தொகை” என்ற திட்டத்தை தொடங்கி மாதந்தோறும் ரூ. 1000 வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பல ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்ப பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இருப்பினும், இந்த மகளிர் தொகையை பெறுவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. இந்நிலையில், இந்த கட்டுப்பாட்டில் சில தளர்வுகளை கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, சட்டமன்ற கேள்வி நேரத்தில், மனநல குன்றிய குழந்தைகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ 1500 உதவித்தொகை வழங்கப்படுவதால், அவர்களின் பெற்றோருக்கு மகளிர் உதவித்தொகை மறுக்கப்படுவதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய பெண்கள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ” மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற்றாலும், இனி அக்குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் உதவித்தொகை பெறும் வகையில், விதிவிலக்கு செய்யப்படும்” என்று அறிவித்துள்ளார். இதனால் அக்குடும்பங்களை சேர்ந்த மகளிர் மகிழ்ச்சியில் உள்ளனர்.


























