
இந்தியர்களின் பாஸ்போர்ட்டில் இனி முகவரி அச்சிடப்படாது.. வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..
குறிப்பிட்ட நாட்டின் குடிமகனாக/குடிமகளாக ஒருவரை அடையாளம் காட்டுவதற்கும், ஒரு நாட்டில் நுழையும்போது அல்லது அந்நாட்டை விட்டு நீங்கிச் செல்லும் போது காட்டப்பட வேண்டிய அதிகாரபூர்வமான ஆவணமாக பாஸ்போர்ட் கருதப்படுகிறது. மேலும், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க நீங்கள் குறிப்பிட்ட நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டியது அவசியம். இதை தொடர்ந்து, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நபர் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தால், அவர்களின் பாஸ்போர்ட் 5 ஆண்டுகள் அல்லது விண்ணப்பதாரர் 18 வயது அடையும் வரை செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் பாஸ்ப்போர்ட்டில் மாற்றப்பட்டுள்ள புதிய அம்சம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உங்கள் சொத்துக்களை உயிலாக எழுதப் போறீங்களா..? அப்போ கண்டிப்பா இந்த விவரங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..
அதாவது, “இந்தியர்களின் பாஸ்போர்ட்டில் முகவரி தகவல்கள் பார்கோடு முறையில் உள்ளீடு செய்து அச்சிடப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளதால் இனி பாஸ்போர்ட்டில் பயணிகளின் முகவரி மற்றும் பெற்றோரின் பெயர் அச்சிடப்படாது என வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, 2023 அக்டோபர் 1ம் தேதிக்கு பின்னர் பிறந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க பிறப்பு சான்றிதழ் கட்டாயம் அளிக்க வேண்டும் என்ற விதி திருத்தமும் செய்யப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது”.























