IIT மெட்ராஸில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு…4 லட்சம் வரை ஆண்டு ஊதியம்…உடனே அப்ளை பண்ணுங்க

0
IIT மெட்ராஸில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு...4 லட்சம் வரை ஆண்டு ஊதியம்...உடனே அப்ளை பண்ணுங்க
IIT மெட்ராஸில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு...4 லட்சம் வரை ஆண்டு ஊதியம்...உடனே அப்ளை பண்ணுங்க

IIT மெட்ராஸில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு…4 லட்சம் வரை ஆண்டு ஊதியம்…உடனே அப்ளை பண்ணுங்க

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸில்  (IIT Madras)  உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் திட்ட பொறியாளர் பணிக்கான காலியிடங்களை  நிரப்ப உள்ளதாக அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு, தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இப்பணி குறித்த  முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே, இதை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
IIT மெட்ராஸ் காலிப்பணியிடங்கள்: 

IIT மெட்ராஸ் வெளியிட்ட அறிவிப்பில், 2 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர் – 1, திட்ட பொறியாளர் – 1.

IIT மெட்ராஸ் கல்வித்தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர்:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

திட்ட பொறியாளர்:

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சிவில் அல்லது கட்டடக்கலையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று  இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

IIT மெட்ராஸ் வயது வரம்பு:

இந்த இரண்டு பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் எந்தவித வயது வரம்பும் குறிப்பிடப்படவில்லை.

IIT மெட்ராஸ் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

அலுவலக உதவியாளர்:  

மாதத்திற்கு ரூ. 15,000 முதல் ரூ. 18,000 வரை  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்ட பொறியாளர்:

வருடத்திற்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IIT மெட்ராஸ் தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

IIT மெட்ராஸ் விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.iitm.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இதற்கு விண்ணப்பிக்க வருகின்ற மார்ச் 28 ஆம் தேதியே இறுதி நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Project Engineer Download Notification PDF


Office Assistant Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!