தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த புதிய நிபந்தனை.. மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள வீடுகளில் மின்கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கீடு செய்யப்படுகிறது. கணக்கீடு செய்யப்பட்ட மின்கட்டணத்தை மக்கள் தங்களுடைய பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலங்களில் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ, செயலி மூலமாகவோ செலுத்தலாம். தற்போது வரை இந்த முறை அமலில் இருக்கும் நிலையில் புதிய வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!
அதாவது, இந்த மாதம் முதல் 4000 ரூபாய்க்கு அதிகமான மின் கட்டணத்தை நேரடி பணமாக செலுத்த முடியாது என்றும், ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. அடுத்தடுத்து வரும் மாதங்களில் நேரடியாக செலுத்தும் தொகை படிப்படியாக குறைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.


























