நெல்லை டூ சென்னை செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக நாளை (ஏப்ரல் 20) முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் நெல்லையில் இருந்து சென்னை செல்லக்கூடிய பேருந்துகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு அமல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும். திருவிழாக்கள், மத கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தாக்கம் ஒரே நாளில் 10,000யை தாண்டி உச்சம் பெற்ற நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதன் படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் தனியார், அரசு போக்குவரத்து, ஆம்னி பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை செயல்பட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்வோருக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையால் ஆபத்து – எய்ம்ஸ் தலைவர் விளக்கம்!!
அதில் நெல்லையில் இருந்து சென்னை பயணம் செய்பவர்களுக்கு காலை 5.30 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். அதற்கு மேல் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது. அதே போல ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு செல்லும் பேருந்துகள் இனிமேல் காலை 7.30 மணி வரை மட்டுமே நெல்லையில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.