
தமிழக அரசு வழங்கும் இந்த விருது பற்றி உங்களுக்கு தெரியுமா..? ” நீங்களும் வாங்கலாம் ரூ. 1 லட்சம் பரிசு”..,மிஸ் பண்ணிடாதீங்க”..!
தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக மாற்ற பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், பல்வேறு துறையில் தலை சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சுற்றுச்சூழல் மற்றும் சூழல் அமைப்புகளை பேணிக்காக்கும் விதமாக நீர்நிலைகளை பாதுகாக்க முயற்சி மேற்கொள்பவர்களுக்கு விருது வழங்கப்படுவதாக புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அதாவது, தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் படி, ” மாநிலத்தின் நீர் வளத்தை பெருக்கிட, தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்” என தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் சிறந்த ஒரு நீர் நிலை பாதுகாவலர் என்ற கணக்கில் 38 பேரை தேர்ந்தெடுத்து “மாண்புமிகு முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது” மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்க பரிசும் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு விருதுகள் என்ற https://awards.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் . மேலும், விண்ணப்பங்களை சமர்பிக்கும் இறுதி நாள் 17.01.2025 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்: விண்ணப்பிக்கும் நபர் எந்த மாவட்டத்தில் பணிகளை மேற்கொண்டுள்ளார் என்பதை தெரிவிக்க வேண்டும். மேலும், ஒரு நபர் ஒரு மாவட்டத்தை மட்டுமே குறிப்பிட வேண்டும். இறுதி முடிவு தேர்வு குழுவினர் அமைப்பு மூலம் பரிந்துரைக்கப்படும்.

























