
போக்குவரத்து நெரிசலில் பெங்களூருவிற்கு முதலிடம்.. பிரபல போக்குவரத்து குறியீடு நிறுவனம் வெளியிட்ட ஆய்வு தகவல்..
இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக பெங்களூரு கருதப்படுகிறது. மேலும், வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் விரிவடைந்து வரும் நகர்ப்புற உள்கட்டமைப்புகளால் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, ஆசியாவின் மோசமான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் பெங்களூரு முதலிடம் பெற்றுள்ளது. மேலும், “TOM TOM போக்குவரத்து குறியீடு” நடத்திய ஆய்வு தகவலின் படி, பெங்களூருவில் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க சராசரியாக “28 நிமிடங்கள் 10 வினாடிகள்” தேவைப்படுகிறதாக கூறப்பட்டுள்ளது.























