தமிழகத்தில் மாதம் ரூ.1,51,100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
தமிழகத்தில் மாதம் ரூ.1,51,100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழகத்தில் மாதம் ரூ.1,51,100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழகத்தில் மாதம் ரூ.1,51,100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தேசிய பல்லுயிர் ஆணையம் (NBA) ஆனது Technical Officer காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தேசிய பல்லுயிர் ஆணையம் (NBA)
பணியின் பெயர் Technical Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NBA காலிப்பணியிடங்கள்:

Technical Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s degree in Law with Computer Knowledge or Master’s degree in Biological/Life Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

NBA வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஊதிய தொகை:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதியமாக ரூ.47,600/- முதல் ரூ.151,100/- வரை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

NBA தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.

NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முந்துங்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, The Administrative Officer, National Biodiversity Authority, TICEL Bio park, 5th Floor, CSIR Road, Taramani, Chennai – 600 113. என்ற முகவரிக்கு பதிவஞ்சல் அல்லது விரைவு தபால் மூலம் 25.09.2023 அன்றுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்ய வேண்டும்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!