நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட் மாணவர் சேர்க்கை – நுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியீடு!!

0
நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட் மாணவர் சேர்க்கை - நுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியீடு!!
நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட் மாணவர் சேர்க்கை - நுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியீடு!!
நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட் மாணவர் சேர்க்கை – நுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியீடு!!

இந்தியாவின் பழமையான உயர்கல்வி நிறுவனமான நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதற்கான நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட்:

மத்திய அரசின் நுகர்வோர் நல அமைச்சகத்தின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் கீழ் செயல்படும் நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் சுகர் டெக்னாலஜி, சுகர் கெமிஸ்ட்ரி, சுகர் என்ஜினீயரிங் மற்றும் சர்க்கரை சார்ந்த துறைகளில் சர்வதேச அளவில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வழங்கி வருகிறது. தற்போது இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதற்கான கல்வித்தகுதியாக பல்வேறு துறைகளுக்கு வெவ்வேறாக உள்ளது. குறிப்பாக முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கு இந்த துறை சார்ந்த இளங்கலை பட்டமும், சான்றிதழ் படிப்புகளும், 12 ஆம் வகுப்பு பொதுவான படிப்புகளுக்கு கல்வித்தகுதியாக உள்ளது. இந்த நிறுவனத்தில் சேர மாணவர்கள் முந்தைய படிப்பில் எடுத்த மதிப்பெண் மற்றும் இந்த நிறுவனத்தின் மூலமாக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு ஆகியவற்றை கொண்டு தேர்வு செய்யப்படுகின்றனர்.

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் 11 காலிப்பணியிடங்கள் – 5531 பேருக்கு நேர்காணல்!!

இதற்கு விருப்பமுள்ளவர்கள் http://nsi.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து Director, National Sugar Institute, Kalyanpur, Kanpur -208017 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.1,500 மற்றும் SC / ST பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். இந்த நுழைவுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடத்தப்படுகின்றன. இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய http://nsi.gov.in/online-application.html என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!