இந்திய தேசிய ராணுவ கல்லூரி மாணவர் சேர்க்கை – மார்ச் 31 கடைசி நாள்!!

0
இந்திய தேசிய ராணுவ கல்லூரி மாணவர் சேர்க்கை - மார்ச் 31 கடைசி நாள்!!
இந்திய தேசிய ராணுவ கல்லூரி மாணவர் சேர்க்கை - மார்ச் 31 கடைசி நாள்!!
இந்திய தேசிய ராணுவ கல்லூரி மாணவர் சேர்க்கை – மார்ச் 31 கடைசி நாள்!!

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவ கல்லுாரியில் விருப்பமுள்ள மாணவர்கள் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் மைக்கேல் பென்னோ தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய ராணுவ கல்லூரி:

இந்திய தேசிய ராணுவ கல்லுாரியில் சேருவதற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாணவர் சேர்க்கைக்கு 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் மைக்கேல் பென்னோ கூறுகையில்,”உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவ கல்லுாரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

TN Job “FB  Group” Join Now

மேலும் இந்த கல்லூரியில் சேர மாணவர்கள் பதினொன்னரை வயது குறையாமலும், 13 வயது பூர்த்தியாகாமல் இருக்க வேண்டும். இந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு வரும் 05.06.2021 அன்று 9:30 மணி முதல் 11:00 மணி வரை கணிதத் தேர்வும், பிற்பகல் 12.00 மணி முதல் 1.00 மணி வரை பொது அறிவுத் தேர்வு மற்றும் பிற்பகல் 2:30 மணி முதல் 4:30 மணி வரை ஆங்கிலத் தேர்வும் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் குறிப்பிடாமல் சான்றிதழ் – பள்ளிக்கல்வித்துறை தகவல்!!

இந்த எழுத்துத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் 6.10.2021 அன்று நடத்தப்படும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம். நேர்முகத் தேர்வுக்குப் பின் தேர்வாகும் மாணவர்கள், ராணுவ மருத்துவ மனைகளில் பரிசோதனை நடத்தப்படும். புதுச்சேரி மாணவர்களுக்கு, புதுச்சேரியில் எழுத்து தேர்வு நடக்கும். தேர்வு மையம் குறித்த தகவல், இணை இயக்குனர் அலுவலக தேர்வுப்பிரிவில், அஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.

தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு முறையில் மாற்றம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.rimc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கான விண்ணப்ப கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 600 மற்றும் அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ரூ.555 வசூலிக்கப்படும். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் இணை இயக்குனர், இரண்டாம் தளம்,பி-பிளாக், காமராஜர் நுாற் றாண்டு கல்வி வளாகம், அண்ணா நகர், புதுச்சேரி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!