அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தோனி..? அவரே சொன்ன கருத்து வைரல்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18 வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாத இறுதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கான மெகா ஏலம் வரும் நவம்பர் மாத இறுதியில் லண்டன் அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரை எல்லாம் தக்க வைக்கும், தோனி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
IND vs NZ 2nd Test 2024: இந்தியா அதிர்ச்சி தோல்வி.. கம்பேக் கொடுத்த நியூசிலாந்து!!
தற்போது இது தொடர்பாக முன்னாள் இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், ‘அடுத்த சில ஆண்டுகளில் என்னால் முடிந்த அளவு நான் விளையாடும் கிரிக்கெட்டை ரசிக்க விரும்புகிறேன்’. ‘இது எளிதான விஷயம் அல்ல’. ‘இதில் உணர்ச்சிகளும், அர்ப்பணிப்பு உணர்வுகளும் நிறைய இருக்கும்’. ‘இரண்டு மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக நான் ஒன்பது மாதங்கள் உடற்தகுதியுடன் இருப்பது அவசியமாகும்’. ‘அதே நேரம் கொஞ்சம் அமைதியாக இருப்பது அவசியம்’ என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.


























