IND vs NZ 2nd Test 2024: இந்தியா அதிர்ச்சி தோல்வி.. கம்பேக் கொடுத்த நியூசிலாந்து!!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பிறகு விளையாடிய இந்திய அணி 156 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 255 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு 359 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
IND vs AUS 2024 டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? விவரம் உள்ளே!!
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் அந்த அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.



























