தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிரடி உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் நாளுக்கு நாள் அதன் விலை அதிகரித்தபடியே இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது வெங்காயம், தக்காளி, பூண்டு உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், பொருட்களின் வரத்து குறைந்ததை காரணம் காட்டி சூப்பர் மார்க்கெட் மற்றும் வெளி சந்தைகளில் அனைத்து அத்தியாவசிய சமையல் பொருட்களும் அநியாய விலையில் விற்கப்படுகிறது.
அத்தியாவசிய பொருள் என்பதால் தவிர்க்க முடியாமல் வாங்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், துவரம்பருப்பு ரூபாய்.110 லிருந்து ரூபாய்.139க்கும், பெரிய வெங்காயம் ரூபாய்.65க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் விலை உயர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.


























