மாதம் ரூ.5500 வரை வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. நிலையான நிதி பரிவர்த்தனைக்கு இதை செய்யுங்கள்..

0
????? ??.5500 ??? ???????? ????? ?????? ????? ???????.. ??????? ???? ??????????????? ??? ???????????..
மாதம் ரூ.5500 வரை வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. நிலையான நிதி பரிவர்த்தனைக்கு இதை செய்யுங்கள்..

மாதம் ரூ.5500 வரை வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. நிலையான நிதி பரிவர்த்தனைக்கு இதை செய்யுங்கள்..

 

எதிர்கால தேவைகளை சமாளிக்க இப்போதே சேமிக்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. மேலும், சிலர் SIP முதலீடுகள், தங்கம் வாங்குவது, பங்குச்சந்தை முதலீடுகள் என பல்வேறு சேவைகளில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில், உச்சபட்ச பாதுகாப்பு என்று வரும்போது பெரும்பாலானோர் போஸ்ட் ஆபீஸ் முதலீடுகளையே நம்பி இருக்கின்றனர்.

அதாவது, மாதாந்திர வருமான திட்டம் (MIS) தபால் அலுவலகத்தில் வழங்கப்படும் சிறுசேமிப்புத் திட்டமாகும். இத்திட்டத்தில் தனி நபர் ரூ.9 லட்சம் வரையும் கூட்டுக்கணக்காக இருந்தால் ரூ. 15 லட்சம் வரையில் முதலீடு செய்தால் மாதம் ரூ.5500 வரை வருமானம் பெற முடியும். இந்த திட்டத்திற்கு 7.4 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் அதிகபட்ச தொகையை செலுத்த முடியாதவர்கள் ரூ.1,000 முதலீடு செய்து போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தை தொடங்கலாம். மேலும், MIS திட்டத்தில்  உங்களுக்கு கிடைக்கும் மாத வருமானம் என்பது நீங்கள் முதலீடு செய்யும் தொகையை பொறுத்தது. இதை தொடர்ந்து, முதிர்வு காலத்திற்கு முன்பு அதாவது மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் உங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுத்தால், மொத்த தொகையில் இருந்து 1 % அபராதம் கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை திருப்பித் தரப்படும் என தபால் வாரியம் தெரிவித்துள்ளது.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!