
இந்தியர்கள் பாஸ்போர்ட்டில் ஏற்பட்ட புதிய மாற்றம்.. இனி விவரங்கள் டிஜிட்டல் முறையில் பதிவு.. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு..!!
பாஸ்போர்ட் என்பது ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பயணிப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ பயண ஆவணமாகும். இது சர்வதேச பயணத்தின் போது ஒரு தனிநபரின் தேசியத்தை சரிபார்த்து, அவர்கள் வெளிநாடுகளுக்குள் நுழையவும் வெளியேறவும் உதவுகிறது. இந்நிலையில் இந்திய குடிமக்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் போது விமான நிலையங்களில் உள்ள இமிக்ரேஷன் கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், கைரேகை ஆதாரத்துடன் கூடிய சிப் உள்ளடக்கிய E-Passport அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
மற்றொரு இந்திய விளையாட்டு வீரருக்கு கௌரவ பதவி.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!
அதன்படி தற்போது “இந்தியாவில் பயோமெட்ரிக் விபரங்கள் அடங்கிய E-Passport பயன்பாட்டை அமலுக்கு கொண்டு வந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது”. மேலும், “E-Passport இன் கடைசி பக்கத்தில் ரேடியோ அதிர்வெண் அடையாளம் காணல் (RFID) சிப், ஆன்டெனா பொருத்தப்பட்டு தனிபட்ட விவரங்கள், கைரேகை, முக தரவு ஆகியவை டிஜிட்டல் என்கிரிப்ஷன் முறையில் பதிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் விவரங்களை திருடவோ, மாற்றவோ முடியாது என்பதால் போலி பாஸ்போர்ட் மோசடிகள் தடுக்கப்படும் என்றும், விமான நிலையங்களில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு மற்றும் மக்களின் காத்திருப்பு நேரம் குறையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

























