தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
தமிழக வானிலை நிலவரம்:
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பம் ஆரம்ப கட்டத்திலேயே அதிக அளவில் மக்களை வாட்டிவந்தது. பொதுவாக கோடை வெயிலின் தாக்கம் மே மாதத்தில் தொடங்கும் அக்னி நட்சத்திர நாட்களன்று தான் அதிக அளவில் இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் கோடை காலத்தின் தொடக்க நிலையிலேயே வெயிலின் கொடுமை அதிக அளவில் உள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் அனுமதி – ஏஐசிடிஇ அறிவிப்பு!!
மாறிய வெப்பநிலை:
ஏப்ரல் மாத தொடக்கத்தில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை எட்டியிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து கோடை வெப்பத்தை குறைத்து வருகிறது. நேற்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பொழிந்தது. அதேபோல் ராணிப்பேட்டை, வாலாஜா பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மயிலாடுதுறையில் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், வைத்தீஸ்வரன் கோயில் நடை, வேலூரில் காட்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பொழிந்தது.
கனமழை:
வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, குமரிக்கடல் பகுதியில் தற்போது நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்கத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, சேலம், தருமபுரி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு முறை – அதிகாரபூர்வ தகவல்!!
நாளை நீலகிரி, கோவை, சேலம் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்களில் மற்றும் புதுவையிலும் மிதமான அளவு மழை பெய்யும். தமிழகத்தில் 17ம் தேதி முதல் மழை அளவு குறையும். சென்னையில் இன்று மிதமான மழையும், நாளை லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்