இனி தமிழ்நாட்டில் வேலைக்கு பஞ்சம் இல்லை…அரசு வெளியிட்ட 42,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ…

0
இனி தமிழ்நாட்டில் வேலைக்கு பஞ்சம் இல்லை...அரசு வெளியிட்ட 42,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ...
இனி தமிழ்நாட்டில் வேலைக்கு பஞ்சம் இல்லை...அரசு வெளியிட்ட 42,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ...

இனி தமிழ்நாட்டில் வேலைக்கு பஞ்சம் இல்லை…அரசு வெளியிட்ட 42,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ…

தமிழக அரசின் 2025 -2026 ஆம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நேற்று (மார்ச் 14) தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில், முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேரடி பணி நியமனம்  உட்பட பல்வேறு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் ரூ. 366 கோடி மதிப்பீட்டில் 9 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் 17,500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் – திருமுடிவாக்கம், மதுரை – கருத்தபுளியம்பட்டி, விழுப்புரம் – சாரம், நாயக்கனுர், இராமநாதபுரம் – தனிச்சியம், கரூர் – நாகம்பள்ளி, தஞ்சாவூர் – நடுவூர், திருச்சி – சூரியூர் மற்றும் திருநெல்வேலி – நரசிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் 9 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்சியில் 250 ஏக்கர் பரப்பளவில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்காவும், மதுரை மற்றும் கடலூரில் காலணித் தொழிற்பூங்காவும் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் 25,000 இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!