
Today Gold Rate: ஒரே நாளில் தங்கம் விலை இவ்ளோ குறைவா…?? இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க மக்களே..
நாட்டில் தங்கத்தின் விலையானது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி செலவுகள் ஆகியவற்றை பொறுத்து நாள்தோறும் மாற்றமடைந்து வருகிறது. மேலும், நேற்று தமிழகத்தில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 880 உயர்ந்தது. அந்தவகையில், இன்று (15.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 640 குறைந்து 1 சவரன் ரூ. 65,760 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,12,000 ஆகவும், 1 கிராம் ரூ. 112 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

























