
மாணவர்களுக்கு ஷாக்…5 முதல் 8ம் வகுப்பு வரை இருந்த கட்டாய தேர்ச்சி முறை ரத்து..!! “மத்திய அரசு அதிகாரிகள் தகவல்”..!!
இந்தியாவில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் கட்டாயம் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்தியா முழுவதும் கட்டாய தேர்ச்சி நடைமுறையில் உள்ளதால் 5 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பெறாவிட்டாலும் பாஸ் என அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 5 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தற்போது இருக்கும் கட்டாய தேர்ச்சி முறையானது அவர்களின் கல்வித்திறனை பாதிப்பதன் காரணமாக அந்நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்நடைமுறை ஆனது மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா ஆகிய பள்ளிகளுக்கு பொருந்தும் எனவும், மேலும் இந்த நடைமுறையை செயல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்து கொள்ளலாம் எனவும் மத்திய கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

























