அரசு பேருந்தில் தொலைதூர பயணம் மேற்கொள்பவரா? இனி இந்த ஹோட்டலில் மட்டுமே உணவுக்காக நிற்கும்!

0
அரசு பேருந்தில் தொலைதூர பயணம் மேற்கொள்பவரா? இனி இந்த ஹோட்டலில் மட்டுமே உணவுக்காக நிற்கும்!
அரசு பேருந்தில் தொலைதூர பயணம் மேற்கொள்பவரா? இனி இந்த ஹோட்டலில் மட்டுமே உணவுக்காக நிற்கும்!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் தொலைதூரப் பயணங்களின் போது எந்தெந்த ஹோட்டலில் உணவு உண்பதற்காக பேருந்துகளை நிறுத்த வேண்டும் என போக்குவரத்து கழகம் விதிமுறைகளை வகுத்துள்ளது.

உணவகங்கள்

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் நீண்ட நேரம் பயணம் மேற்கொள்பவர்கள் தரமற்ற உணவகங்களில் மட்டுமே உணவு உண்பதற்காக பேருந்துகள் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து பயணிகள் புகார்களை அளித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அரசு போக்குவரத்துக்கழகம் பேருந்துகளுக்கு எந்தெந்த ஹோட்டலில் உணவு உண்பதற்காக நிறுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது.

EMI கட்டண உயர்வு அபாயம் – கனரா வங்கியின் MCLR விகித அதிகரிப்பு எதிரொலி!

இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோவை, நாகர்கோவில், செங்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவன் உணவகத்தில் மட்டுமே உணவு அருந்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போன்று வேலூர், வேப்பம்பள்ளி, சித்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்துகள் சரவணபவன் உணவகத்தில் மட்டுமே உணவு உண்ண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதன்படி அரசு பேருந்துகள் போக்குவரத்து கழகத்தின் அறிவுறுத்தலின்படி, அறிவிக்கப்பட்டுள்ள உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். இதனை மீறி செயல்பட்டால் பயணிகள் 18005991500 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

இதே போன்று மற்ற பேருந்துகள் எந்தெந்த உணவகங்களில் நிறுத்த வேண்டும் என்பது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஹோட்டல் அரிஸ்டோ : திருச்சியிலிருந்து சென்னை விக்கரவாண்டி, விழுப்புரம் செல்லும் பேருந்துகள்.
  • ஹோட்டல் ECR IN : பாண்டியிலிருந்து சென்னை, கடப்பாக்கம், செங்கல்பட்டு செல்லும் பேருந்துகள்
  • ரமேஷ் ஹோட்டல் : தூத்துக்குடியிலிருந்து மதுரை, மேலகரந்தை செல்லும் பேருந்துகள்.
  • ஸ்ரீ ஆனந்தபவன் கிருஷ்ணகிரி: பெங்களூரிலிருந்து பில்லனகுப்பம், கிருஷ்ணகிரி செல்லும் பேருந்துகள்.
  • JP ஹோட்டல்: சென்னையிலிருந்து வேலூர், பாலுசெட்டிசத்திரம், காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள்.
Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!