காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க கால அவகாசம் -எல்.ஐ.சி நிறுவனம் அறிவிப்பு!!!
கொரோனா காரணமாக பிரீமியம் தொகையை செலுத்த முடியாமல் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க எல்.ஐ.சி வாய்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி மார்ச் 6-ஆம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று எல்.ஐ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலாவதியான பாலிசி புதுப்பித்தல்:
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (LIC) இந்தியாவின் மிக பெரிய நிறுவனம் 245-க்கு மேற்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் வருங்கால சங்கங்களின் கூட்டமைப்பை கொண்டது. இந்த நிறுவனத்தின் தலைமையிடம் மும்பை நகரில் அமைந்துள்ளது. 63 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் 2000-க்கு மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பலரின் பொருளாதார நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் சிலர் பல மாதங்களாக ப்ரீமியம் தொகையை செலுத்தாமல் உள்ளதால் அவர்களது பாலிசி காலாவதி ஆக்கப்பட்டது. இந்நிலையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க மார்ச் 6-ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளதாக எல்.ஐ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறந்தபின் சத்து மாத்திரைகள் வழங்க ஏற்பாடு – ஆலோசனை கூட்டத்தில் முடிவு!!
இதுகுறித்து எல்.ஐ.சி வெளியிட்ட அறிவிப்பின் படி, “கொரோனா காரணமாக பிரீமியம் செலுத்த முடியாமல் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க மார்ச் 6 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பாலிசிதரர்கள் தாங்கள் கடைசியாக செலுத்திய பிரீமியம் தேதியில் இருந்து 5 ஆண்டுகள் வரை காலாவாதியாகியுள்ள பாலிசிகளை புதுப்பிக்கலாம்.
இந்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏ) தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!
இதற்கு மருத்துவ பரிசோதனை ஏதும் தேவையில்லை, காலாவதியான தகுதிவாய்ந்த பாலிசிகளில் பிரீமியம் தொகையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி 1 லட்சம் வரை உள்ள பிரீமியம் தொகைக்கு 20% சலுகை வழங்கப்படும். மேலும் 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை உள்ள பிரீமியம் தொகைக்கு 25% சலுகையும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மருத்துவம் மற்றும் அதிக ஆபத்தான பாலிசிகளுக்கு இந்த சலுகை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள எல்.ஐ.சி நிறுவனத்தில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்