ATM  பயன்படுத்தி பணம் எடுப்பவரா நீங்கள்…?  உங்களுக்கான டெபிட் கார்ட் வரம்பை பத்தி இதுல படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

0
ATM  ??????????? ???? ????????? ???????...?  ??????????? ?????? ?????? ?????? ????? ???? ??????? ???????????????..!!
ATM  பயன்படுத்தி பணம் எடுப்பவரா நீங்கள்...?  உங்களுக்கான டெபிட் கார்ட் வரம்பை பத்தி இதுல படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

ATM  பயன்படுத்தி பணம் எடுப்பவரா நீங்கள்…?  உங்களுக்கான டெபிட் கார்ட் வரம்பை பத்தி இதுல படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

 

இன்றைய டிஜிட்டல் யுகத்தில்  UPI பரிவர்த்தனைகள் இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளன. இந்த UPI பரிவர்த்தனைகள் ஒரு பக்கம் அதிகரித்து வரும் நிலையில், மறுபக்கம் கணிசமான மக்கள் இன்னும் ரூபாய் நோட்டுகளையே நம்பியிருக்கிறார்கள். அதாவது ATM-கள் பயன்படுத்தி பணம் எடுத்து செலவு செய்வதை சிலர்  எளிதாக கருத்துகின்றனர். இந்நிலையில், ஒவ்வொரு வங்கி டெபிட் கார்டுகளுக்கும்  தினசரி ATM-ல் பணம் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள்  உள்ளது. அது குறித்து இப்பதிவில் காண்போம்.

முதலில், பாரத ஸ்டேட் வங்கி (SBI),   மேஸ்ட்ரோ அல்லது கிளாசிக் டெபிட்,இன் டச் மற்றும் எஸ்பிஐ கோ, பிளாட்டினம் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஒரு நாளைக்கு ரூ.40,000 முதல் ரூ.1,00,000 வரை பணம் எடுக்க அனுமதிக்கிறது. இதை தொடர்ந்து, HDFC வங்கி NRO, டைட்டானியம், சர்வதேச வணிகம்  டெபிட் கார்டுகளை உபயோகித்து ஒரு நாளைக்கு ரூ.25,000 முதல் ரூ.3,00,000 வரை பணம் எடுக்க அனுமதிக்கிறது. மேலும், கனரா வங்கியின் கிளாசிக் ரூபே, விசா அல்லது ஸ்டாண்டர்ட் மாஸ்டர்கார்டு டெபிட் கார்டுகள் பயன்படுத்தி தினசரி ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரை பணம் எடுக்க முடியும். அதைபோல் ஐசிஐசிஐ வங்கி கோரல் பிளஸ், எக்ஸ்பிரஷன், பிளாட்டினம் மற்றும் டைட்டானியம், ஸ்மார்ட் ஷாப்பர் சில்வர், Sapphiro, டெபிட் கார்டுகளை பயன்படுத்தி தினசரி ரூ.1,50,000 முதல் ரூ.2,50,000 வரை  பணம் எடுக்க முடியும். இதை தொடர்ந்து, ஆக்சிஸ் வங்கியின்  RuPay பிளாட்டினம்,Priority, Prestige, Delight, and Value Plus,பர்கண்டி டெபிட் கார்டுகள் மூலம்  தினசரி ரூ.40,000 முதல் ரூ.3,00,000 பணம் பெற்றுக்கொள்ளலாம். இறுதியாக பேங்க் ஆஃப் பரோடாவின்  RuPay Qsparc NCMC மற்றும் Mastercard DI டெபிட் கார்டுகள் மூலம் தினமும் 50,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியும்.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!