ஓணத்தை ரத்து செய்த கேரள அரசு..! பாதிப்படையும் தமிழக வியாபாரிகள்..!!
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த மிகப்பெரிய நிலச்சரிவு மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த ஆண்டு நடக்க இருந்த ஓணம் பண்டிகை ரத்து செய்யப்படுவதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார் . இதனால், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த வாடா மல்லி , செண்டுமல்லி , பட் ரோஸ் , பன்னீர் ரோஸ் ஆகியவை தேக்கமடைந்து குறைந்து விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பூ வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இது தமிழக வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக வியாபார சங்கங்கள் தெரிவிக்கின்றன.
ரேஷன் கார்டில் பிழைகள் உள்ளதா..? மாற்றம் செய்யணுமா..? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க ..!



























