
செம்பருத்தி சீரியலுக்கு பின் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த நடிகர் கார்த்திக் – வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி ஆபிஸ் சீரியல் மூலமாக பிரபலமான நடிகர் கார்த்திக் ராஜ், மீண்டும் ஜீ தமிழ் நிகழ்ச்சி ஒன்றில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
நடிகர் என்ட்ரி
சின்னத்திரையில் ஏகப்பட்ட இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் தான் கார்த்திக் ராஜ். அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியல் மூலமாக பிரபலமானவர். அதன் பின் அவர் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் நாயகனாக நடித்தார். அவர் நடித்தவரை சின்னத்திரையில் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் சீரியலை விட்டு விலகினார். அதனால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன் பின் அவர் தயாரிப்பில் வெளியான படத்தை வெளியிட முடியாமல், ரசிகர்களிடம் பணம் கேட்டு வீடியோ வெளியிட்டது, ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை கிளப்பியது. இந்நிலையில் அவர் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், அவர் மீண்டும் ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக செய்தி வெளியானது. அந்த சீரியல் குறித்த விவரங்கள் வெளியாகாத நிலையில், கார்த்திக் ராஜ் தற்போது சாம்ராஜ்யம் என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருக்கிறார்.
ப்ரைம் டைம் சீரியலை விட்டு விலகிய பிரபல நடிகை – முக்கிய அப்டேட் ரிலீஸ்.. ரசிகர்கள் ஷாக்!
Exams Daily Mobile App Download
ஜீ தமிழ் சேனல் தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 15வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருணத்தை கொண்டாட இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், அதில் கார்த்திக் ராஜ் கலந்து கொள்வது போல புகைப்படம் வெளியாகி இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் அவரை சின்னத்திரையில் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்