மகாபலிபுரம் அருகே ‘கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம்’.. சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்!!
கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி தமிழக முதலமைச்சர் முகஸ்டாலின் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் உருவாகிறது. அதாவது தி.மு.க. அறக்கட்டளைக்குச் சொந்தமான 5.4 ஹெக்டேர் நிலத்தில் 2.54 ஏக்கரில் வணிக ரீதியிலான கட்டடமாக அமைகிறது.
தமிழகத்தில் இன்று (அக்.23) 14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் அலர்ட்!!
இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வடகடம்பாடி, பெருமாளேரி கிராமத்தில் ரூ. 55 கோடி மதிப்பீட்டில் 2.54 ஹெக்டர் பரப்பில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் அமைகிறது. இந்நிலையில் கலைஞர் பன்னாட்டு மையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிக் கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் திமுக சார்பில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
























