தமிழகத்தில் இன்று (அக்.23) 14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் அலர்ட்!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் நேற்று (அக்டோபர் 22) முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்றும் (அக்டோபர் 23) 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
வெள்ளத்தில் மிதக்கும் மதுரை.. தொடர் கனமழையால் பொதுமக்கள் தவிப்பு!!
அதாவது நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், நெல்லை, குமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாள்களுக்கு மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழையும் பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























