நெருங்கும் த.வெ.க மாநாடு.. 2 மணி நேரம் பேசுகிறாரா விஜய்?? முழு விவரம் உள்ளே!!
விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் 2 மணி நேரம் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர். 27 மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் நிலையில், 6 மணியளவில் விஜய் உரையாற்ற உள்ளதாகக் கூறப்படுகிறது.
மகாபலிபுரம் அருகே ‘கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம்’.. சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்!!
மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றிய பின் விஜய் மேடைக்கு வருகை தர உள்ளார். அதை தொடர்ந்து, முழுக்க முழுக்க தன் கட்சியின் கொள்கையைப் பிரகடனப்படுத்தும் வகையில் அவரின் பேச்சு அமைய இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இத்தகவல் சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
























