Jio & Airtel ன் ரூ.600 க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டம் – கூடுதல் விவரங்கள் இதோ!

0
Jio & Airtel ன் ரூ.600 க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டம் - கூடுதல் விவரங்கள் இதோ!
Jio & Airtel ன் ரூ.600 க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டம் - கூடுதல் விவரங்கள் இதோ!
Jio & Airtel ன் ரூ.600 க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டம் – கூடுதல் விவரங்கள் இதோ!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ரூ.600 க்கும் குறைவாக உள்ள ரீசார்ஜ் திட்டங்களின் சிறப்பம்சம் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் திட்டம்

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் போட்டி போட்டுக் கொண்டு சில ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த டேட்டா திட்டங்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல் சில கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது. அதன் படி ரூ.300க்கும் அதிகமான ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டங்களும் அதிகளவு நன்மைகளை அளிக்கின்றன. அந்த வரிசையில் தற்பொழுது பயன்பாட்டில் உள்ள ரூ.600 க்கும் குறைவான ஜியோ மற்றும் ஏர்டெலின் சில டேட்டா திட்டங்கள் குறித்த விளக்கங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் – தலைமை செயலாளர் நாளை ஆலோசனை!

அதன் படி, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.598க்கான ப்ரீபெய்ட் திட்டம், ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவை வழங்குவதோடு 56 நாட்கள் வரை செல்லுபடியாகிறது. மேலும் கொடுக்கப்பட்ட தினசரி 2 GB டேட்டா தீர்ந்த பிறகு, அதன் இணைய வேகம் 64 kbbs வரை கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், பயனர்கள் ஒரு நாளைக்கு 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ் உடன் ஒரு வருடம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவையும் பெற்று கொள்ளலாம். இதனுடன் இலவசமாக கொடுக்கப்படும் சந்தாவின் உண்மையான விலை ரூ.939 ஆகும். இது தவிர, பயனர்களுக்கு JioTV, JioCinema, Jiocloud போன்ற Jio பயன்பாடுகளுக்குமான இலவச சந்தா வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

ஏர்டெல் நிறுவனத்தை பொருத்தளவு ரூ.598க்கான ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 1.5 GB டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த டேட்டா பேக் தீர்ந்த பிறகு அதன் இணைய வேகம் 64Kbps ஆக குறைகிறது. இதனுடன், பயனர்களுக்கு தினசரி 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ் உடன் ஷா அகாடமியில் ஒரு வருடத்துக்கான இலவச பாடங்கள், அமேசான் பிரைம் வீடியோவின் மொபைல் பதிப்பு இலவச சோதனை, 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 திட்டம், ஃபாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக், இலவச ஹலோ ட்யூன்ஸ், விங்க் மியூசிக் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சேவை ஆகியவை கொடுக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!