தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் – தலைமை செயலாளர் நாளை ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், நாளை தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலாளர் ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமாக பரவி வருகிறது. தடுப்பு பணியாக தமிழக முதல்வர் மாநிலம் முழுவதும் கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கை பிறப்பித்தார். இதனால் ஏழை, எளிய மக்கள் தங்கள் அன்றாட வேலைகளை இழந்து சிரமப்பட்டனர். ஊரடங்கு மட்டுமே தற்போது நோய் பரவலை தடுக்க ஒரே வழியாக உள்ளது. இந்த ஊரடங்கால் அரசு பொருளாதார ரீதியாக பெரும் சவாலை சந்தித்து வருகிறது. ஆனாலும் மக்களின் நலன் காக்க ஊரடங்கு கட்டாயம் என்பதால் தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்தும் வருகிறது. முழு ஊரடங்கு காரணமாக அனைத்து கடைகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டது.
உஷாரா இருங்க… 16 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை – வானிலை அறிக்கை!
மற்றொரு புறம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் பகுதி, வயது வாரியாக தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் மட்டுமே கொரோனாவிலிருந்து நம்மை காக்கும் பேராயுதமாக உள்ளது. இந்த தடுப்பூசி மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பயன்பட்டால் தொற்று பரவல் கடந்த 2 வாரங்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் அரசு மக்களின் தேவையை அறிந்து கொரோனா பாதிப்புகளை அடிப்படையாக கொண்டு தளர்வுகளை அளித்து வருகிறது.
TN Job “FB
Group” Join Now
அவ்வபோது முதல்வர் மருத்துவ குழுக்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறார். இந்த தளர்வுகள் ஜூன் 14 முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் ஜூலை 31-ஆம் தேதி காலை 6.00 மணி வரை மேலும் சில தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை முதல்வர் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.