JIO நிறுவனத்தின் புதிய சேவை – Air Fiber ரூ. 599 மட்டுமே.. முழு விவரம் உள்ளே!
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான jio தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியாக ஜியோ ஏர் பைபர் இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோ ஏர் பைபர்:
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5G இணைய சேவையை தொடர்ந்து தற்போது ஏர் பைபர் இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் ஏர் பைபர் இணைய சேவை செப்டம்பர் 19ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி நேற்று அதிகாரப்பூர்வமாக ஜியோ ஏர் ஃபைபர் இணைய சேவை மற்றும் கட்டணத்தையும் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் வாயிலாக ஜியோ பயனர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் அதிவேக இணைய சேவையை பெற முடியும். தற்போதைக்கு சென்னை, ஹைதராபாத், அகமதாபாத், கொல்கத்தா உள்ளிட்ட 8 மெட்ரோ நகரங்களில் மட்டுமே இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் டெங்கு காய்ச்சலால் 14 பேர் பாதிப்பு – எச்சரிக்கும் சுகாதாரத்துறை!
இந்த ஜியோ ஏர் பைபர் இணையத்தின் ஆரம்பகட்ட விலை ரூ.599 ஆக உள்ளது. இதில் பயனர்கள் 550 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேனல்கள், 30 mbps வேகத்திலான இணைய சேவை, நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற நன்மைகளை பெறலாம்.