
தமிழக அரசுப் பள்ளிகளில் JEE நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் – சென்னை ஐஐடி இயக்குநர் விளக்கம்!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற அரசு சார்பில் பயிற்சி வழங்கப்படுவது போல, ஜேஇஇ நுழைவு தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் கல்வித்துறையுடன் இணைந்து பயிற்சி வழங்கப்படும் என சென்னை ஐஐடி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு பயிற்சி
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மத்திய தொழில்நுட்ப கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர JEE உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நுழைவுத் தேர்வுகளில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது. அதனால் இது குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பள்ளி மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து 5-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கூடுதலாக பாடத்திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், மாணவர்கள் நுழைவுத் தேர்வு தரவரிசை பட்டியலில் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்கள் ஐஐடியில் படிப்பை தொடர முடியும் என தெரிவித்தார். அது மட்டுமில்லாமல் ‘இண்டர் டிசிப்ளினரி’ என்று அழைக்கப்படும் இரட்டை பட்டம் பெறும் முறை மூலமாக மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த துறையில் இருந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு வேறு ஒரு பாடப்பிரிவை படிக்க முடியும் என தெரிவித்தார். இந்த வசதி மூலம் மாணவர்கள் இப்போது தேர்வு செய்து படிக்கும் படிப்பில் திருப்தி இல்லை என்றால் அந்த படிப்புடன் கூடுதலாக தங்களுக்கு பிடித்தமான பாடத்தை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இன்று சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை நிலவரம்!
Exams Daily Mobile App Download
சென்னை ஐஐடியில் ‘இண்டர் டிசிப்ளினரி’ முறையில் 10 பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இது இன்னும் 4 ஆண்டுகளில் 20 பாடப்பிரிவுகளாக அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்த இரட்டை பாடத்திட்டம் முறையானது எதிர்கால கல்வித் திட்டமாக இருக்கும் என தெரிவித்த அவர், ஜேஇஇ போன்ற மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளை எழுத மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை தவிர கூடுதலாக படிக்க வேண்டியதாக இருக்கிறது. அதனால் அரசு பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்வுக்கு தயாராகும் விதமாக சிறிய அளவிலான பாடங்களை இணைப்பது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறையுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். அதனால் இனி அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் உதவியுடன் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க இருப்பது கிராமப்புற மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்